Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கதறி அழுத சிறுமி…. வளர்ப்பு தந்தை செய்த காரியம்…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த வளர்ப்பு தந்தையை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்துள்ளனர்.

மதுரை மாவட்டத்திலுள்ள மதிச்சியம் கிராமத்தில் வசிக்கும் 33 வயது வாலிபருக்கும், கணவரை இழந்த பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்தப் பெண்ணுக்கு ஏற்கனவே 12 வயதில் 6-ஆம் வகுப்பு படிக்கும் மகள் உள்ளார். இந்நிலையில் வாலிபர் அந்த பெண்ணை 2-வதாக திருமணம் செய்து கொண்டார். இதனை அடுத்து வளர்ப்பு தந்தையான வாலிபர் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார்.

இதுகுறித்து சிறுமி தனது தாயிடம் தெரிவித்து கதறி அழுதுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாய் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் போக்சோ சட்டத்தில் அந்த வாலிபரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |