கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்கள் மொத்தம் நாற்பத்தி ஏழு லட்சம் பேர் ஆனால் மோடி பொய் கூறுகிறார் ராகுல் காந்தி குற்றச்சாட்டு.
உலக சுகாதார அமைப்பு இதுவரை கொரோனா அல்லது சுகாதார அமைப்பு மற்றும் சமூகத்தின் தொற்று நோயால் பாதிக்கப்பட்டு 1.49 கோடி மக்கள் உயிரிழந்துள்ளதாக வியாழக்கிழமை அன்று தெரிவித்தது. இதில் இந்தியாவில் மட்டும் 47 லட்சம் பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இது உலக அளவில் அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களில் கொரோனா தொற்றுக்கு உயிரிழந்தவர்களில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்காகும். ஆனால் இதனை இந்தியா மறுத்துள்ளது.
47 lakh Indians died due to the Covid pandemic. NOT 4.8 lakh as claimed by the Govt.
Science doesn't LIE. Modi does.
Respect families who've lost loved ones. Support them with the mandated ₹4 lakh compensation. pic.twitter.com/p9y1VdVFsA
— Rahul Gandhi (@RahulGandhi) May 6, 2022
இந்த நிலையில் இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “இந்தியாவில் கொரோனா வைரஸால் 47 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். ஆனால் மோடி அரசு 4.8 லட்சம் பேர் பலியாகியுள்ளதாக கூறுவது பொய். அறிவியல் பொய் சொல்லாது. ஆனால் நரேந்திர மோடி கூறுகிறார். தங்களது அன்புக்குரியவர்களை இழந்து தவிக்கும் குடும்பங்களுக்கு மதிப்பளிக்கும் வகையில் அனைவருக்கும் 4 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.