தெற்குஅந்தமான் கடல் பகுதியில் வளிமண்டலம் மேலடுக்கு சுழற்சி உருவாக இருப்பதாக நேற்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. இந்த நிலையில் வங்கக் கடலில் அந்தமானை ஒட்டிய பகுதியில் காற்றழுத்த தாழ்வுபகுதி உருவாகி இருக்கிறது. இது வட மேற்கு திசையில் நகர்ந்து 2 தினங்களில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறுமென்று சென்னை வானிலை ஆய்வு மையமானது தெரிவித்து இருக்கிறது.
இதன் எதிரொலி காரணமாக கன்னியாகுமரி, நெய்வேலி, தென்காசி, விருதுநகர், தேனி, மதுரை, திண்டுக்கல், திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி, ஈரோடு, கரூர், நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி போன்ற மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து நாளை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி-மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது.