Categories
தேசிய செய்திகள்

ஷாக் நியூஸ்… மூடப்படும் பொறியியல் கல்லூரிகள்…. அரசு எடுக்கும் நடவடிக்கை…?

தமிழ்நாட்டில் பொறியியல் கல்லூரிகளின் நிலை பற்றி  அமைச்சர் பொன்முடி சட்டப் பேரவையில் விளக்கம் அளித்து பேசியுள்ளார். 

தமிழ்நாட்டில் சில பொறியியல் கல்லூரிகள் மூடப்பட்டு வருகின்றது. பல இடங்களில் மாணவர்கள் பொறியியல் படிப்புகளில் சேர ஆர்வம் காட்டாத காரணத்தினால் ஆயிரக்கணக்கான இடங்கள் நிரப்பப்படாமல் இருக்கிறது. இந்த நிலையில் தமிழ்நாடு உயர் கல்வித்துறை அமைச்சர் பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிக்க தமிழக அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் பற்றி சட்டப்பேரவையில் பேசியுள்ளார்.

அப்போது திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் தொகுதியில் புதிதாக பொறியியல் கல்லூரிகள் தொடங்க அவசியம் ஏற்படவில்லை. திருப்பூர் மாவட்டத்தில் ஏற்கனவே இருக்கக்கூடிய கல்லூரிகள் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மாணவர்களின் உயர்கல்வி தேவையை நிவர்த்தி செய்ய போதுமானதாக இருக்கின்றது எனவும் தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகள் கட்டியுள்ளவர்கள் அதை மூடி வரும் சூழ்நிலையில் இருந்து வருகின்றது.

மேலும் திருப்பூர் மாவட்டத்தில் மட்டும் ஆறு சுயநிதி பொறியியல் கல்லூரிகள் மூடப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகள் சுமார் 2 லட்சம் இடம் இருக்கிறது. இதில் ஒரு லட்சத்து 28 ஆயிரம் மட்டுமே நிரம்பியுள்ளது. மீதி 72,000 இடம் காலியாக இருக்கின்றது. வரும் காலங்களில் பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிக்க வேண்டும் என்ற அடிப்படையில் நான் முதல்வர் திட்டத்தை முதல்வர் அறிவித்து பொறியியல் கல்லூரிகளுக்கு புதிய பாடத்திட்டத்தை உருவாக்க தொழில் முனைவோர்களிடம், ஆலோசனை கேட்டு நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு பணிகள்  நடைபெற்றுவருகின்றது. பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.மேலும் பின்தங்கிய மாவட்டங்களுக்கு முன்னுரிமை கொடுத்து நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார்.

Categories

Tech |