இறந்து கிடந்த யானையின் சடலத்தை வனத்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆனைகட்டி, பொன்னூர், மேல்முடி உள்ளிட்ட மலை பகுதிகளில் ஏராளமான வன விலங்குகள் மற்றும் யானைகள் வசித்து வருகிறது . இந்த வனவிலங்குகள் தற்போது கோடை காலம் என்பதால் மக்கள் வாழும் குடியிருப்புகளுக்குள் நுழைந்து விவசாய நிலங்களை சேதப்படுத்தி வருகின்றது. இந்நிலையில் நேற்று அதே பகுதியில் பெண் யானை ஒன்று இறந்து கிடந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் யானையின் உடலை கைப்பற்றி மருத்துவர்கள் ஆய்வு செய்வதற்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் யானை இறந்து 3 நாட்கள் ஆனது தெரியவந்துள்ளது.