செய்தியாளர்களிடம் பேசிய இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத், திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சிக்கு வந்த பிறகு இவர்கள் மேலும் புத்தாக்கம் பெற்றிருக்கிறார்கள். ஒருபுறம் திராவிட முன்னேற்ற கழக ஆட்சி இந்து சமய அறநிலையத் துறை மூலமாக, அவர்கள் சிவராத்திரி போன்ற விழாக்களை கோவில்கள் மூலமாக அறநிலையத் துறை மூலமாக அரசு விழாவாகவே நடத்துகிறார்கள், அதிலே மாண்புமிகு தமிழக முதலமைச்சருடைய துணைவியார் சென்று கலந்து கொள்கிறார்கள்.
நாங்கள் சிவராத்திரி நடத்துகிறோம், நாங்கள் ஆன்மீகவாதிகளுக்கு எதிரானவர்கள் அல்ல என்றெல்லாம் அவர்கள் சொல்லுகிறார்கள். ஆனால் நடைமுறையில் அவர்களுடைய ரத கஜ துரக படைகள் தங்களையும், இந்த திராவிட மாடல் என்று சொல்லக் கூடிய அவர்கள் இன்றைக்கு இந்த யூ2 புரூட்டஸ் இந்த சேனல் வந்து தொடர்ந்து இந்து சமய நம்பிக்கைகளை குறிப்பாக…. இந்து சமய மந்திரங்களை குறிவைத்து அது ஆபாசமானது, அசிங்கமானது, அது இழிவானது. ஏற்கனவே பிரம்மா, சரஸ்வதி இவர்களை குறித்தெல்லாம் இழிவு படுத்திக் கொண்டிருந்தார்கள்.
இப்போ ஆட்டை கடித்து மாட்டை கடித்து கடைசியாக நம்முடைய தமிழர் சமயத்தினுடைய மிகத் தொன்மையான அடையாளம் இந்த நடராஜ தத்துவம், இந்த நடராஜர் திருநடனம். இந்த திரு நடனத்திலேயே சுவாமி நடனம் குறித்து, உலகம் முழுவதிலும் அதெல்லாம் அது வின்ஞானத்தின் பிறப்பிடம், அணுத்துகளின் ஆட்டம், அந்த பிரபஞ்ச தத்துவம் அங்கு அடங்கியிருக்கிறது என்று சொல்லுகிறார்கள். அதை வைத்து சர்வதேச ஆராய்ச்சி மையங்களில் எல்லாம், விண்வெளிக் கூடங்கள் எல்லாம் கூட ஆய்வுக் கூடங்களிலும் கூட சிதம்பரம் நடராஜர் சிலையை வைத்து அறிவியலின் அடுத்த உலகிற்கு சென்று கொண்டிருக்கிறார்கள் என தெரிவித்தார்.