மான் இறைச்சியை விற்பனை செய்ய முயன்ற வாலிபர்களை வனத்துறையினர் கைது செய்துள்ளனர்.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள விளாமுண்டி கிழக்கு வனப்பகுதியில் வனத்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சாக்குப்பையுடன் நின்று கொண்டிருந்த 3 பேரை காவல்துறையினர் அழைத்து விசாரணை செய்தனர். அந்த விசாரணையில் அவர்கள் பழனிச்சாமி, நல்லதம்பி, கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் என்பதும், நாய் கடித்து இறந்த புள்ளி மானின் இறைச்சியை விற்பனை செய்ய முயன்றதும் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து வனத்துறையினர் 3 பேரையும் கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த வனத்துறையினர் அவர்களிடம் இருந்த மான் இறைச்சியை பறிமுதல் செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.