சமந்தா தான் நடித்த காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படம் பற்றி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் சமந்தா. இவர் தற்பொழுது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நயன்தாராவுடன் இணைந்து காத்துவாக்குல 2 காதல் திரைப்படத்தில் நடித்து இருக்கின்றார். இத்திரைப்படமும் சென்ற ஏப்ரல் 28-ஆம் தேதி திரையரங்கில் வெளியானது. இத்திரைப்படத்தில் சமந்தா கதீஜா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவரின் நடிப்பு ரசிகர்களுக்கு மிகவும் பிடித்திருக்கின்றது.
https://www.instagram.com/p/CdF2jaDJbUk/?utm_source=ig_embed&ig_rid=bb3a1f2a-0a99-45a6-a2b9-19423c9a2775
தற்போது இணையத்தில் #Khatija என்ற ஹேஸ்டேக் வைரலாகி வருவதை அடுத்து சமந்தா மகிழ்ச்சியடைந்துள்ளார். இதையடுத்து ரசிகர்களுக்கு தனது நன்றியை தெரிவித்துள்ளார். இந்த நிலையில் தற்போது இத்திரைப்படம் குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியுள்ளதாவது, கதீஜா என்ற வேடத்தை கொடுத்த விக்னேஷ் சிவனுக்கு நன்றி. எனக்கு பிடித்த ஜானர் காமெடி உள்ளது. நான் நிஜத்தில் இருப்பது போலவே நடிக்க வாய்ப்பு கிடைக்கும் பொழுது எனக்கு எக்ஸ்ட்ரா ஸ்பெஷல்தான். வாக்களித்ததை விட அதிகமாக செய்திருக்கின்றீர்கள். அதற்காக என்றுமே நான் நன்றிக் கடன் பட்டுள்ளேன், நன்றி என கூறியுள்ளார்.