செய்தியாளர்களிடம் பேசிய ஹிந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத், அறிவியல் பூர்வமான நம்முடைய சிதம்பரம் நடராஜர் சிலை ஆன்மிகத்தோடு அறிவியலும் கடந்த ஒரு படைப்பு. அதை வந்து ஆபாச படத்தி, கொச்சைப்படுத்தி அவர் காலை தூக்கி ஆடுகிறார். இது வேண்டுமென்றே செய்து இருக்கிறார்கள். அதனால் உடனடியாக இந்த யூடியூப் சேனல் தடை செய்யப்பட வேண்டும்.
அதிலே அத்தகைய கருத்துக்களை தொடர்ந்து பேசி வருகின்ற அந்த நபர் அவர் பெயர் எனக்கு தெரியாது… மைனர் விஜய் வேறு ஏதோ சொல்கிறார்கள் புருட்டஸ் என்று சொல்கிறார்கள். அவர் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும். இதற்கு பின்னணியில் இருக்கக்கூடிய அத்தனை தொழில்நுட்பம் சார்ந்தவர்கள், அவரை பின்னால் இருந்து இயக்குபவர்கள் எல்லோரும் கைது செய்யப்பட வேண்டும் என்பதுதான் சிவ பக்தர்களின் கோரிக்கை.
இதற்காக இரண்டு மூன்று நாட்களாக தமிழகம் முழுக்க பல்வேறு காவல் நிலையங்களில் இந்து அமைப்புகள் சார்பில், சிவ பக்தர்கள் சார்பில் புகார் மனு கொடுக்கப்பட்டிருக்கிறது. சிதம்பரம் நடராஜர் திரு கோவிலிலும், அங்கு இருக்கக்கூடிய பக்தர்களிடம் கையெழுத்து வாங்கி,
அங்கே இருக்கக்கூடிய அடியார் அமைப்புகள் எல்லாம் சென்று சிதம்பரம் காவல் நிலையத்திலும் புகார் செய்து இருக்கிறோம். இன்றைக்கு ஒரு அடையாளமாக இந்த கோரிக்கை ஆர்ப்பாட்டம், திருமுறை விண்ணப்பம், சிவபுராணம் ஓதுதல் இப்படி சிவ அடியார்களின் உணர்வை வெளிப்படுத்த கூடிய வகையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்று இருக்கிறது.
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் நாங்கள் எல்லோருக்கும் பொதுவானவர்கள், நாங்கள் எந்த மதத்தையும் இழிவுபடுத்தி மாட்டோம் என்று சொல்லி இருக்கிறார். ஆனால் இப்போது அவருடைய அந்த போர்வையை போர்த்திக்கொண்டு நானும் திமுக தான், திமுக மந்திரி என்னிடம் இருந்து இந்த புத்தகம் வாங்கிட்டாரு, நான் ஸ்டாலினிடம் பரிசு வாங்கினேன், நான் யூட்யூபில் நான் பணம் வசூல் செய்து நான் பகுத்தறிவு கருத்துக்களை எல்லாம் பரப்புகிறேன்.
இதற்கு பெயர் பகுத்தறிவு கருத்தும் கிடையாது ஒன்றும் கிடையாது. இது வந்து முழுக்க முழுக்க சிவ பக்தர்களையும் மனதை புண்படுத்தக் கூடிய வகையிலே இந்த யூட்யூப் பிரச்சாரம் அமைந்து இருக்கிறது. அதை உடனடியாக தடை செய்ய வேண்டும் என்பதுதான் சிவ பக்தர்களின் கோரிக்கை. அந்த கோரிக்கையை வெளிப்படுத்தக் கூடிய வகையில் எங்களுடைய பிரார்த்தனை போராட்டம் இப்போது இங்கே நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என தெரிவித்தார்.