Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

63 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும் பேருந்து நிலையம்….. ஆய்வு செய்த அமைச்சர்….!!!!

புதிதாக அமைக்கப்படும் பேருந்து நிலையத்துக்கான இடத்தை வீட்டு வசதித்துறை அமைச்சர் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார்.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள மாநகரின் மையப்பகுதியில் பேருந்து நிலையம் ஒன்று அமைந்துள்ளது. இந்த பேருந்து நிலையத்தில் இருந்து தினம் தோறும் ஆயிரக்கணக்கான பேருந்துகள் இயக்கப்படுகிறது. இதனால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் கூடுதலாக 2 பேருந்து நிலையங்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில் கரூர் பைபாஸ் சாலை அருகே நகராட்சிக்கு சொந்தமாக இருக்கும் 52 ஏக்கர் நிலத்தில் 22 ஏக்கர் பரப்பளவில் 63 கோடியே 50 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதனை வீட்டு வசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி நேரில் சென்று ஆய்வு செய்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் இந்த பேருந்து நிலையமானது ஒரே நேரத்தில் 63  பேருந்துகள் நிற்கும் வகையில் 63  ரேக்குகள் அமைக்கப்பட உள்ளது . மேலும் 163 கடைகள், பயணிகள் ஓய்வு அறை, கழிவறை, முன்பதிவு கவுண்டர் போன்ற வசதிகளும் அமைக்கப்பட உள்ளது. இந்த  பேருந்து நிலையம் அமைப்பதற்கான டெண்டர் இன்னும் 3 வாரத்தில் வெளியான பின்னர் பணிகள்  தொடங்கி 2 ஆண்டுக்குள் புதிய பேருந்து நிலையம் கட்டி முடிக்கப்படும் என அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |