Categories
அரசியல்

“குஷியோ குஷி”…. இனி எல்லாமே ஆன்லைன் தான்…. இந்தியன் வங்கி செம மாஸ் அப்டேட்….!!!!

பல்வேறு கூடுதல் வசதிகளை ஆன்லைன் மூலமே பெரும் சிறப்பு திட்டத்தை இந்தியன் வங்கி கொண்டு வந்துள்ளது. இ-புரோக்கிங் எனப்படும் இந்த முறையின் மூலம் இன்சூரன்ஸ், முதலீடுதிட்டங்கள் மற்றும் பங்குகள் உள்ளிட்டவற்றை நேரடியாக இந்தியன் வங்கி நெட் பேங்கிங் மூலம் மேற்கொள்ளலாம் இதன் மூலம் எல்ஐசி பங்குகளை சில நிமிடங்களில் வாங்க முடியும் என இந்தியன் வங்கி தெரிவித்துள்ளது. வாடிக்கையாளர்களின் சிரமத்தை குறைப்பதற்காக இது கொண்டு வரப்பட்டுள்ளது.

வாடிக்கையாளர்களுக்கான தனது சலுகைகளை முழுமையாக டிஜிட்டல் மயமாக்குவதற்கான ஒரு படியாக இந்த டிஜிட்டல் புரோக்கிங் தீர்வை இந்தியன் வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த முயற்சியானது வாடிக்கையாளர்களை சில நிமிடங்களில் எல்ஐசி ஐபிஓ பின் தடையின்றி முதலீடு செய்ய உதவுகின்றது என்று ஒரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கியின் வாடிக்கையாளர்களுக்கு அனைத்து நிதி தயாரிப்புகள் மற்றும் சேவைகளை ஒரே கூரையின் கீழ் மலிவு விலையில் வழங்குவதற்கான டிஜிட்டல் மயமாக்கல் பணிக்கு ஏற்ப இது ஒரு முக்கிய முயற்சி ஆகும் என்று வங்கி நிர்வாக இயக்குனர் கூறியுள்ளார்.

Categories

Tech |