தமிழகத்தில் பெண் பயணிகளுக்கு இலவச பேருந்து திட்டத்தில் தினசரி 36 லட்சம் பெண் பயணிகள் பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வரும் நிலையில் இன்று போக்குவரத்து துறை மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து அமைச்சர் எஸ் எஸ் சிவசங்கர் துறை சார்ந்த பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.
இதில் போக்குவரத்து துறை கொள்கை முக்கியமான ஒன்றான அரசு பேருந்துகளில் இலவச பயண சலுகை மூலம் இதுவரை எத்தனை பெண் பயணிகள் பயன் அடைந்து உள்ளனர் என்பது குறித்து விளக்கம் அளித்துள்ளனர். அதில் தமிழகம் முழுவதும் இத்திட்டத்தில் 7321 சாதாரண நகரப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில் தினசரி 36 லட்சம் பெண் பயணிகள் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இதனால் பெண்கள் தங்கள் பணி இடத்தை சுலபமாக அடைய முடிவதுடன் கல்வி, சுகாதாரம் மற்றும் பொழுது போக்கு ஆகியவற்றை எளிதில் பெறமுடிகிறது.
இந்த நிலையில் கடந்த ஏப்ரல் 30ஆம் தேதி நிலவரப்படி நூத்தி 6.34 கோடி பெண்கள் பயணம் மேற்கொண்டுள்ளனர். இதில் சாதாரண நகரப் பேருந்துகளில் பயணிக்கும் பெண் பயணிகளின் எண்ணிக்கை அறுபத்தி 61.78% என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.