Categories
அரசியல் மாநில செய்திகள்

சி.எம் வீட்டுல கோவிலுக்கு போறாங்க… இதை பார்த்தா என்ன நினைப்பாங்க ?… நொந்து போன ”சம்பத்” …!!

செய்தியாளர்களிடம் பேசிய இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத், நடராஜர் நடனம் குறித்து புத்தகத்தில் பதிவு பண்ணி இருக்கலாம். அப்பவே அதற்கான எதிர்ப்புகள் வந்தது. நக்கீரன்  வார இதழில் அக்னிஹோத்திரம் என்று சொல்லக்கூடிய ஒரு தாத்தாச்சாரியார், ஒரு பெரியவர் அவர் வந்து தன்னை வேத அறிஞர் என்று சொல்லுகிறார், சமஸ்கிருத அறிஞர் என்று சொல்லிக்கிட்டு வேத மந்திரங்களுக்கு தவறான பொருள் படும்படி அந்தத் தொடரை எழுதி வந்தார்.

அப்போதே நாங்கள் எல்லாம் எதிர்ப்பு தெரிவித்தோம். அப்போது அதற்கான மறுப்பு புத்தகத்தை நாங்கள் வெளியிட்டு இருக்கிறோம். அது வந்து முடிந்து போன ஒரு விஷயம், அவரும் இறந்துவிட்டார். இப்போ வந்து வேண்டும் என்று, அதை எடுத்து அந்த புத்தகத்தை கொளுத்த வேண்டும், அதுவே வந்து வேண்டும் என்றே உள்நோக்கத்தோடு எழுதப்பட்ட ஒரு புத்தகம்.

இது வந்து  தமிழ்நாட்டில் ஒரு அமைதியின்மையை  உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு எழுதி இருக்கிறார். இதே போல பல இடங்களில் நம்முடைய முதல்வர் குறித்தோ, ஈ.வே.ரா குறித்தோ அல்லது நம்முடைய பிற சமய நம்பிக்கைகள் குறித்து யாராவது பேசினால் உடனே கைது செய்யப்படுகிறார்கள், கல்யாணராமன் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டார், ஈ.வே.ரா குறித்து பேசிய நம்முடைய கிஷோர் கே ஸ்வாமி குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டார்.

இப்ப வந்து நம்முடைய முதல்-அமைச்சர், அரசாங்கம் இதை பற்றி ஏதாவது சொன்னால் உடனடியாக அவர்களை கைது செய்கிறார்கள். சிவபெருமானை நிந்தித்திருக்கிறார், இது ரொம்ப தவறு, நிந்தித்ததோடு மட்டுமல்ல, ஆபாசமாக, அசிங்கமாக இந்த பேச்சை யூடியூப்பை…..  முதலமைச்சருடைய குடும்பத்தில் இருக்கிறவர்கள் எல்லாம் கோவிலுக்கு போகிறார்கள், வருகிறார்கள் அவர்கள் கேட்டால் என்ன நினைப்பார்கள் ?

நான் சேகர்பாபுவையே கேட்க சொல்கிறேன், மாண்புமிகு அறநிலையத்துறை அமைச்சர் இந்தப்பாடலை கேட்கட்டும், அவருடைய அந்த பிரச்சாரத்தை கேட்கட்டும், அவர் இதை ஒத்துக் கொள்வாரா? அதனால் இதன் பெயரில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுதான் எங்களுடைய கோரிக்கை. அந்த புத்தகத்தை தடை செய்யவேண்டும் அப்படி என்கிற விஷயம் எல்லாம் அடுத்த கட்டம், இப்போது இவர் வேண்டும் என்று ஒரு கொடூர மனப்பான்மையோடு இதை செய்திருக்கிறார். இவருக்கு வந்து ஒரு மனநோய். மற்றவர்களை துன்புறுத்தி பார்க்க வேண்டுமென்பது. அதனால் இதை வந்து உடனடியாக தடை செய்ய வேண்டும்.

Categories

Tech |