Categories
சேலம் மாவட்ட செய்திகள்

ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசார்… “விபத்துக்குள்ளாகிய காரில் புகையிலைப் பொருட்கள்”…. கார் டிரைவர் கைது…!!!!

போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்ட போது விபத்துக்குள்ளாகி சிக்கிய காரில் புகை பொருட்கள் இருந்ததையடுத்து பறிமுதல் செய்து கார் டிரைவரை கைது செய்தார்கள்.

சேலம் மாவட்டத்தில் உள்ள ஓமலூர் அருகே இருக்கும் தீவட்டிபட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பழனிச்சாமி மற்றும் போலீசார் சேலம்- தர்மபுரி இடையேயான தேசிய நெடுஞ்சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்ட பொழுது தீவட்டிப்பட்டி அடுத்திருக்கும் ஜோடுகுளி பஸ் ஸ்டாப் அருகே கார் ஒன்று தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளாகி அங்கே நின்று இருக்கின்றது. இதை ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசார் பார்த்து காரை சோதனையிட்டபோது அதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்தது.

அதில் 16 மூட்டைகளில் 1,86,000 மதிப்புள்ள பான்பராக், குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் இருந்ததையடுத்து போலீசார் புகையிலை பொருட்கள் மற்றும் காரை பறிமுதல் செய்து கார் டிரைவரை விசாரணை செய்தார்கள். விசாரணை செய்ததில் அவர் கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூர் எம்ஜி ரோடு பகுதியை சேர்ந்தவர் என்பது தெரிய வந்ததை அடுத்து போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தார்கள்.

 

Categories

Tech |