ஆன்லைன் இணைப்பு இல்லாமல் UPI payment செய்வது குறித்து பார்க்கலாம்.
இன்றைய காலகட்டத்தில் ஆன்லைன் பரிவர்த்தனைகள் என்பது அதிகரித்துக் கொண்டே செல்கிறது. நீங்கள் Google pay, phone pay, Paytm போன்ற பல்வேறு UPI சேவைகள் மூலமாக பண பரிவர்த்தனைகள் செய்யும் போது சில சமயம் பாதியில் பண பரிவர்த்தனைகள் நின்றுவிடுகிறது. எனவே ஆன்லைன் இணைப்பு இல்லாமல் UPI payment செய்வதற்கான வழிமுறைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அதன்படி உங்கள் போனில் *99# என்ற USSD எண்ணை டயல் செய்ய வேண்டும். அதன்பிறகு ஆன்லைன் இணைப்பு இல்லாமல் பணப் பரிவர்த்தனைகள் செய்து கொள்ளலாம். இந்த நம்பரை டயல் செய்வதன் மூலமாக ஆன்லைன் இணைப்பு இல்லாமல் UPI நம்பரை மாற்றம் செய்தல், சேமிப்பு கணக்கில் இருக்கும் இருப்புத் தொகையை தெரிந்து கொள்ளுதல் போன்றவைகளையும் தெரிந்து கொள்ளலாம்.