Categories
அரசியல் மாநில செய்திகள்

இந்த பக்கம் 2பேர்…. அந்த பக்கம் 2பேர்… முன்னாடி 2பேர்…. பின்னாடி 2பேர்… இது மட்டும் கரெக்டா ?

ஒரு மனிதனை, மற்ற மனிதர்கள்  தோளில் வைத்து சுமப்பது, பல்லாக்கில் வைத்து சுமப்பது மனிதனுக்கு மனிதன் சமம் என்பதற்கு எதிராக இருக்கின்றது என்ற கேள்விக்கு பதிலளித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, உதயநிதி ஸ்டாலின் அவர் கார்ல போகிறார். அவரை சுற்றி 30 பேர் தொங்குறாங்க. இந்த பக்கம் 2 அமைச்சர், அந்த பக்கம் 2 அமைச்சர், பின்னாடி ரெண்டு அமைச்சர், முன்னாடி 2 அமைச்சர். இதெல்லாம் பாருங்க. இது ஒரு அரசியல் கட்சியா?

இன்னைக்கு நான் சொன்ன கருத்துக்கு திராவிட கழக தலைவர் சில கருத்துக்களை எல்லாம் சொல்லியிருந்தார்.  அதாவது பல்லக்கைகு சுமப்பதற்கு அண்ணாமலை தயாராகிவிட்டார், இதற்கு தான் பெரியார் தமிழக பூமியில் பிறந்தார் என்று சொல்லியிருக்கிறார்கள். சரி பெரியாரை ஏற்றுக்கொண்ட திராவிட முன்னேற்ற கழகம், உங்களுடைய வாழ்க்கை முறை எப்படி நீங்கள்  வைத்திருக்கிறீர்கள்?

ஒரு வேனில் 10 பேர்  தொற்றிக்கொண்டு  போவது,  சட்டசபையில் காலையிலிருந்து இரவு வரைக்கும் தனிமனித புகழ்ச்சி. ஒரு மனிதன் நடித்த எல்லா படம் பெயரையும் காலையிலிருந்து இரவு வரைக்கும் சொல்கிறார்கள்.  படம் பெயர் யாருக்குமே தெரியாது, படம் ஓடுகிறதா என்று கூட தெரியாது. அந்த படம் பெயர் சொல்லி ஒன்னு ஒண்ணா சொல்றது. இது வந்து இதுதான் வந்து ஒரு சாதாரண மனிதனுக்கு பல்லக்கு தூக்குவது, பல்லக்கு தூக்குவது என்பது கையில் தூக்குவது கிடையாது. உங்க மனதில் தூக்குவது என திமுகவை விமர்சித்தார்.

Categories

Tech |