பிரதமர் நரேந்திர மோடியால் கொண்டுவரப்பட்ட உஜ்வாலா யோஜனா என்ற திட்டத்தின் கீழ் ஏழை எளிய மக்களுக்கு இலவச கேஸ் சிலிண்டர் இணைப்பு கொடுக்கப்பட்டது. இதன் மூலமாக கோடிக்கணக்கான மக்கள் பயனடைந்தனர். இதனால் அனைவருடைய வீடுகளிலும் கேஸ் இணைப்பு பெறப்பட்டு சிலிண்டர் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் சிலிண்டர் முடிந்தவுடன் மக்கள் புக் செய்தால் ஒரு சில டீலர்களிடமிருந்து சிலிண்டர் வருவதற்கு வாரக்கணக்கில் ஆகிவிடுகின்றது. இதனால் அந்த சமயங்களில் அவதிக்குள்ளாகின்றனர்.
ஒவ்வொருவரும் தங்களுக்கு தேவையான சிலிண்டர்களை தங்களுடைய டிஸ்ட்ரிபியூட்டர்களிடம் இருந்து பெறாமல் வேறு வேறு டிஸ்ட்ரிபியூட்டர்களிடம் இருந்து பெறுகின்றனர். அவ்வாறு டெலிவரி செய்யும் நபர்களுக்கு டெலிவரி சார்ஜ் கொடுக்க வேண்டிய அவசியம் கிடையாது. நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் டெலிவரி சார்ஜ் என்ற பெயரில் கட்டணக் கொள்ளையில் ஈடுபட்டு வருகிறார்கள். ஆனால் உங்களுடைய சிலிண்டரின் விலையை விட ஒரு ரூபாய் கூட அதிகபட்சமாக அவர்களுக்கு கொடுக்க வேண்டிய அவசியமே கிடையாது.
விருப்பப்பட்டால் மட்டுமே கொடுக்கலாம். ஆனால் கட்டாயப்படுத்தி எந்த ஒரு நபரும் உங்களிடமிருந்து டெலிவரி சார்ஜ் கட்டணத்தை வாங்கக் கூடாது. அப்படி உங்களிடம் ஏதேனும் அதிகப்படியான கட்டணம் வசூலித்தால் உடனடியாக டிஸ்ட்ரிபியூட்டரை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். ஒரு டிஸ்ட்ரிபியூட்டர் மேல் அதிகமான கட்டணம் வசூலிப்பதாக புகார் வந்தால் அவருடைய உரிமம் ரத்து செய்யப்படும் என ஒவ்வொரு ஆயில் நிறுவனத்தின் விதிகளில் உள்ளது. எனவே நிச்சயம் இது குறித்து புகார் அளிக்கலாம்.