Categories
அரசியல் மாநில செய்திகள்

அரசே முன்னின்று நடத்தட்டும்…. பாஜக துணை நிற்கும்… ஸ்டாலினுக்கு அண்ணாமலை திடீர் சப்போர்ட் …!!

தமிழகத்தில் பல்லாக்கு தூக்குவதை தமிழக அரசு அனுமதிக்க வேண்டும். குருமார்களை திட்டமிட்டு அரசு அவமானப்படுத்துகிறது, மிரட்டுகிறது. இந்த விபரீத விளையாட்டை உடனடியாக அரசு கைவிட வேண்டும். பல்லக்கு தூக்குவது தமிழக மண்ணில் இரண்டாயிரம், மூவாயிரம் ஆண்டுகளாக இருந்து வரும் சித்தாந்தம். இதனை இவர்கள் மாற்ற முடியாது.

5 முறை முதலமைச்சராக இருந்த கருணாநிதியே இதை தடை செய்யவில்லை. ஆனால் மு க ஸ்டாலின் அரசு தடை செய்வது நியாயமல்ல. ஆதீனகளுக்கு  அரசு உரிய மரியாதை கொடுக்க வேண்டும். அவர்களின் கோரிக்கையை ஏற்று முன்னின்று நடத்த வேண்டும்.

இந்துக்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்களுக்கும் இவர்தான் முதலமைச்சர். எனவே நான் அனைத்து மதங்களையும் மதிக்க கூடிய முதல்வர் என்று சொல்லும் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பல்லாக்கு தூக்குவதை முன்னின்று நடத்த வேண்டும். அப்படி நடத்தினால் பாரதிய ஜனதா கட்சி நிச்சயமாக தமிழக முதல்வருக்கு துணை நிற்கும் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Categories

Tech |