Categories
பல்சுவை

பள்ளிக்கூடமே செல்ல பிடிக்காத இவர்…. எப்படி கணித மேதையானார்…? சில சுவாரஸ்ய தகவல்கள் இதோ….!!!!

சீனிவாச இராமானுஜன் 1887 –இல்  தமிழ்நாட்டில் ஈரோடு மாவட்டத்தில் கோட்டை பகுதியில் பிறந்த கணித அறிஞர் ஆவார். இவர் தனது சிறு வயதில் பள்ளிக்கூடம் செல்வதில் விருப்பமில்லாமல் செல்வார். பெற்றோரின் கட்டாயத்தின் பேரில் பள்ளிக்கு செல்வார். இவருக்கு கணிதத்தை தவிர வேறு எந்த பாடத்திலும் கவனம் செலுத்த முடியவில்லை. எப்பொழுதுமே கணிதத்தை மட்டுமே படித்துக்கொண்டிருந்தார். இதனால் மற்ற பாடங்களில் கவனம் செலுத்த முடியவில்லை.

இவர் சிறு வயதிலேயே யாருடைய உதவியும் இல்லாமல் மிக மிக வியப்பூட்டும் விதத்தில் கணிதத்தின் மிக அடிப்படையான ஆழ் உண்மைகளைக் கண்டுணர்ந்தார். 1914-ஆம் ஆண்டுக்கும், 1918-ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் மூவாயிரத்திற்கும் அதிகமான புதுக் கணிதத் தேற்றங்களைக் கண்டுபிடித்தார். ஆனால் இவருக்குக் கணித்ததை தவிர வேறு எந்த பாடங்களும் தெரியாது என்பதால் டிகிரி முடிக்கவில்லை. இதனால் இவருக்கு எந்த ஒரு கம்பெனியில் வேலை கிடைக்கவில்லை.

கடைசியாக ஒரு கம்பெனியில் குறைந்த சம்பளத்திற்கு வேலைக்கு செல்கிறார். அப்பொழுதும் இவருக்கு கணிதத்தில் சாதிக்க வேண்டும் என்று பெரிய கனவு இருந்தது. அதனால் அனைத்து கணித மேதைகளிடமும் இவர் கண்டுபிடித்த கணித பார்முலாவை அனுப்புகிறார்கள். அப்படி இவர் அனுப்பிய கடிதம் லண்டனில் இருக்கக்கூடிய மிகப்பெரிய கணிதமேதையான GH Hard என்பவரிடம் சேர்கிறது. இதை பார்த்த அவர் பிரம்மித்து போகிறார். இன்றளவும் ராமானுஜம் எழுதி வைத்துவிட்டு போன கணித பார்முலாக்களில் விஞ்ஞானிகள் வெறும் 20% மட்டுமே கண்டுபிடித்துள்ளார்கள்.

Categories

Tech |