பெய்ஜிங்கில் இளைஞர்கள் தினம் கொண்டாட்டம் கண்கவர் கலை நிகழ்ச்சிகளும் களைகட்டியது.
சீன நாட்டில் பெய்ஜிங் என்ற நகரம் அமைந்துள்ளது. இந்த நகரத்தில் இளைஞர்கள் தின கொண்டாட்டம் நிகழ்ச்சிகளுடன் களை கட்டியது. இதனை தொடர்ந்து 1919ஆம் ஆண்டு மே மாதம் 4ஆம் தேதி அன்று ஏகபத்தியம் மற்றும் பிரபுத்துவ முறைக்கு எதிராக இளைஞர்கள் ஒன்று திரண்டெழுந்து போராட்டம் நடத்தியுள்ளனர். இந்த போராட்டத்தில் ஜனநாயகத்தின் மறுமலர்ச்சிக்கு வித்திட்டதை நினைவு கூறும் வகையில் சீனாவில் ஆண்டுதோறும் மே மாதம் 4ஆம் தேதி இளைஞர்கள் தினம் கொண்டாடப்படுகின்றது.
இந்த நாட்டிற்கு பெருமை சேர்க்கும் வகையில் இளைஞர்கள் அழித்த பங்கேற்பை மையமாகக் கொண்டு மே 4ஆம் தேதி நடத்தப்பட்ட மாபெரும் நிகழ்ச்சிகளில் பதக்கங்களை வென்றவர்கள் மற்றும் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற வீரர்கள் போன்ற ஏராளமான இளைஞர்கள் பங்கேற்றுள்ளனர். மேலும் இந்நிகழ்ச்சியில் பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக் தொடரின் பாடலும் பாடப்பட்டது.