உலகிலேயே தனிமையான வீடு பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்களை இந்த தொகுப்பில் தெரிந்து கொள்வோம்.
டிராபிக் ஜாம், ஒர்க்கு பிரஷர், டென்ஷன் என எதுவும் இல்லாமல் தனியாக இருக்க விரும்புவோருக்கு ஒரு அரிய வாய்ப்பு. கடலுக்கு நடுவே சிறிய தீவில் குட்டியாக வீடு கட்டி விற்பனைக்கு வைத்துள்ளனர். இந்த வீடு ரியல் எஸ்டேட் இணையதளமான Zillow தளத்தில் விற்பனைக்காக பட்டியலிடப்பட்டுள்ளது. கனடா எல்லைக்கும் அகாடியா தேசிய பூங்காவுக்கும் இடையே உள்ள டக் லெட்ஜஸ் தீவில்தான் இந்த வீடு அமைந்துள்ளது. 1.5 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த தீவில் குட்டியாக வீடு கட்டப்பட்டுள்ளது . 2019 ஆம் ஆண்டில் இந்த வீடு கட்டப்பட்டது. வீட்டின் பரப்பளவு 540 சதுர அடி, இந்த வீட்டில் ஒரு பெட்ரூம் உள்ளது. ஆனால் பாத்ரூம் கிடையாது. சிறிது தூரத்தில் கழிப்பறை உள்ளது.
இந்த வீடு தான் உலகிலேயே மிகவும் தனிமையான வீடு என்று கூறப்படுகின்றது. இந்த வீட்டின் விலை 3 லட்சத்து 39 ஆயிரம் டாலருக்கு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. அதாவது இந்திய மதிப்பில் ரூபாய் 2.50 கோடி. இதனை 1919 டாலர் இஎம்ஐ செலுத்தியும் வாங்கிக்கொள்ளலாம். இந்த வீட்டின் டிராபிக் போன்ற பிரச்சினை இருக்காது. இந்த இடத்தில் முழுக்க முழுக்க அமைதி மட்டுமே இருக்கும். இந்த வீடு மரத்தால் கட்டப்பட்டு உள்ளது. தரை கூட மரத்தினால் செய்யப்பட்டது. ஆனால் வீட்டுக்குள் ஏசி, ஹீட்டர் போன்ற வசதிகள் இல்லை. தேவைப்பட்டால் வெளியில் பீச்சில் நடந்து செல்லலாம். ஒரு படகு வாங்கி அதனை பயன்படுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளன.