பழைய மற்றும் புதிய நோட்டுகளில் Window Threat அப்படி என்கிற ஒரு லைட் அடிக்கிற மாதிரியான ஒரு கோடு ரூபாய் நோட்டின் நடுவில் இருக்கும். ரூபாய் நோட்டை நம்மை நோக்கி படுக்க வைத்து பார்த்தால் அந்த கொடு ஊதா கலரில் தெரியும். அதை அப்படியே லைட்டாக கொஞ்சம் கொஞ்சமாக மேலாக கொண்டுவந்தால் பச்சைக்கலராக அது மாறினால் நல்ல நோட்டு என்று தெரிந்துவிடும்.
பிரிண்ட் அல்லது கலர் ஜெராக்ஸ் எடுத்து கள்ளநோட்டு தயாரிக்கும் ரூபாய் தாளில் இந்த மாதிரியான நிறம் மாறாது. அதேபோல ரூபாய் நோட்டில் காலியாக இருக்கும் வெள்ளை கலர் இடத்தில் கொஞ்சம் தூக்கி வைத்து பார்த்தால் காந்தி தாத்தா படமும், 500 என்றும் எழுதியிருக்கும். இதைப் பார்த்த உடனே நல்ல நோட்டு என்பதை கண்டுபிடித்து விடலாம். கண் தெரியாதவர்கள் ரூபாய் நோட்டுகளை எப்படி அடையாளம் காண்பதற்கு பிரைலி சிஸ்டம் என்பதை RBI அறிமுகப்படுத்தியுள்ளது.
அது எப்படி என்றால், 2000 ரூபாய் தாளில் இருபுறங்களில் ஓரத்தில் ஏழு கோடுகள் போடப்பட்டிருக்கும், அதேபோன்று அசோகா சக்கரத்திற்கு மேலே ரூ.2000 ரூபாய் என்று செவ்வக வடிவத்தில் எழுதியிருக்கும். இதை தடவி பார்த்து பார்வை இழந்தவர்கள் கண்டுபிடித்து விடுவார்கள். அதேபோல 500 ரூபாய் தாளில் ஐந்து கோடுகள் இரண்டு பக்கங்களில் போடப்பட்டிருக்கும். அசோகா சக்கரத்திற்கு மேல் வட்ட வடிவில் 500 என்று எழுதப்பட்டிருக்கும் அதை வைத்து கண்டுபிடித்து விடுவார்கள்.
200 ரூபாய் தாளில் இரண்டு கொடு இரண்டு முட்டை அதனை அடுத்து இரண்டு கோடு இரண்டு பக்கங்களிலும் போடப்பட்டிருக்கும். மேலும் அசோகா சக்கரத்திற்கு மேல் வட்ட வடிவில் 200 எழுதப்பட்டிருக்கும். 100 ரூபாய் நோட்டில் 4 கோடு போடப்பட்டிருக்கும். அசோகா சக்கரத்திற்கு மேல் முக்கோண வடிவத்தில் 100 போடப்பட்டிருக்கும்,. இதை வைத்து கண் தெரியாதவர்கள் கண்டுபிடித்துவிடுவார்கள். ரூபாய் நோட்டுகளில் மொத்தம் 17 குறியீடுகள் இருக்கிறதாம்.