Categories
உலக செய்திகள்

என்ன ஒரு கொடுமை?…. இப்படி கூடவா சட்டம் இருக்கு…. கடுமையான வடகொரியாவின் சட்டங்கள்….!!!!

விதவிதமான அணு ஆயுதங்களை கண்டுபிடித்து உலக நாடுகளையே மிரட்டி வரும் நாடுதான் வடகொரியா. ஆனால் இப்படிப்பட்ட நாட்டில் என்ன நடக்கிறது என்றே வெளியே தெரியாத அளவிற்கு புது புது சட்டங்கள் பின்பற்றப்பட்டு வருகின்றன. அங்கு வாழும் மக்கள் அந்நாட்டு அதிபர் இடம் கிட்டத்தட்ட அடிமை போலவே வாழ்ந்து வருகிறார்கள் என்பது அந்நாட்டில் இருந்து தப்பி அகதிகளாக மற்ற நாடுகளில் தஞ்சம் அடைந்தவர்கள் கூறும் தகவல்களில் இருந்து தெரியவந்துள்ளது. அதிலும் குறிப்பாக பெண்களுக்கு அந்த நாட்டில் சுத்தமாக சுதந்திரமே கிடையாது. தலைமுடியை வெட்டி அழகாக குட்டையாக வைக்கக்கூடாது என்றும் இறுக்கமான பேண்ட் மற்றும் குட்டை பாவாடை அணியவும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் வட கொரியா நாட்டில் சினிமா தியேட்டர் மற்றும் கேளிக்கை விடுதி என்பது கிடையாது. அங்குள்ள மக்கள் வீட்டை பூட்டிக்கொண்டு தென் கொரியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட சினிமா பட சி.டி.களை மட்டுமே பார்க்கின்றனர். ஆனாலும் ரோந்து வரும் அதிகாரிகளிடம் சிக்கினார் நாட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட கடும் தண்டனை விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தவறு செய்தவர் மட்டும் சிறையில் அடைக்கப்படாமல் அவரது இரண்டு தலைமுறை பரம்பரைக்கும் தண்டனை விதிக்கப்படும். நாட்டில் 28 ஹேர் ஸ்டைல் மட்டுமே உள்ளது. அதன்படியே அனைவரும் முடி வெட்ட வேண்டும். அதுமட்டுமல்லாமல் அந்நாட்டின் அதிபர் கிம் ஜாங் உன் பெயரை யாரும் வைக்கக் கூடாது. அவரின் ஹேர் ஸ்டைலையும் யாரும் வைக்கக்கூடாது என்பது விதிமுறை. இதனை மீறி யாராவது செயல்பட்டால் உடனே சிறையில் அடைத்துவிடுவார்கள்.

Categories

Tech |