விண்வெளி ஆராய்ச்சியில் எப்போதுமே முதலிடத்தில் இருப்பது அமெரிக்கா தான். இப்படிப்பட்ட அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா, யாராலயும் முறியடிக்க முடியாத அளவிற்கு ஒரு சாதனையை செய்துள்ளது. நிலவு,செவ்வாய் என்ற ஆராய்ச்சிகளை செய்து வந்த நாசா தற்போது சூரியனையும் ஆய்வு செய்துள்ளது. சூரியனின் வளிமண்டலம் எப்படி இருக்கிறது என்பதை தெரிந்துகொள்ள “பார்க்கர் சோலார் ப்ரோப் ” என்ற ஒரு விண்கலம் சூரியனை ஆய்வு செய்வதற்காக விண்ணுக்கு அனுப்பியது.
இந்த விண்கலத்தில் WIDPR என்ற புகைப்படக் கருவி உள்ளது. இதோட பூமிக்கும் பின் காலத்திற்கும் இருக்கும் தொடர்பில் பிரச்சினை ஏற்படும் பட்சத்தில் அந்த பிரச்சனையை தானே சரி செய்து கொள்ளும் வகையில் இதிலுள்ள சிஸ்டம் விண்கலத்தில் இருப்பது சிறப்புக்குரியது. இந்த விண்கலங்கள் ஏற்பட்டதிலிருந்து 43 நிமிடத்திற்கு பின் ராக்கெட்டிலிருந்து பிரிந்து சூரியனை நோக்கிய தனது பயணத்தை தொடங்கியது. இந்தப் பயணத்தில் சோலார் ப்ரோப்சூரியனுக்கு அருகில் செல்ல இருபத்திநான்கு முறை சூரியனை சுற்றி வந்து கொஞ்சம் கொஞ்சமாக நெருங்குவது தான் இதன் திட்டம்.
அதன்படி 8 முறை இந்த விண்கலம் சூரியனை சுற்றி வந்த போதுதான் சூரியனின் வளி மண்டலத்திற்குள் முதன்முறையாக நம்முடைய விண்கலம் ஒன்று நுழைந்து விட்டதை விஞ்ஞானிகள் கண்டறிந்தனர். சூரியன் திடமான பொருள்களால் ஆன ஒன்று கிடையாது. அது முழுவதும் வாயுவால் ஆன ஒரு நட்சத்திரம். அந்த நட்சத்திரத்தை சுற்றி ஒரு வளி மண்டலம் உள்ளது. அந்த வழி மண்டலத்தில் பெயர் கொரோனா. சூரியனின் மேற்பரப்பை விட இந்த வளிமண்டலத்தின் வெப்பம் அதிகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த வளி மண்டலம் முழுவதும் சூரிய துகள்களால் நிறைந்திருக்கும்.
சூரியனில் இருக்கும் அதீத வெப்பம் மற்றும் அழுத்தத்தால் இந்த சூரிய துகள்கள் வளி மண்டலத்திற்கு வெளியே உந்தித் தள்ளப்படும். சூரியனின் வலிமண்டல பகுதி பல மில்லியன் டிகிரி செல்சியஸ் வெப்பநிலை கொண்டிருந்தாலும் அதிலிருந்து வெளிப்படும் வெப்பம் குறைவுதான். காரணம் வளிமண்டல பகுதியின் அடர்த்தி குறைவு. நாசா அனுப்பிய விண்கலம் சூரியனின் கொரோனா பகுதியை நெருங்கும்போது 2.8 மில்லியன் டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையை எதிர் கொண்டாலும் அந்தப் பகுதியை எதிர்கொள்ளும் கவசத்தின் மேற்பரப்பு சுமார் 1,400 டிகிரி செல்சியஸ் வரை மட்டுமே வெப்பம் அடையும். அதில் இருந்து பாதுகாக்க 73 கி.கி எடையுள்ள வெப்பநிலை பாதுகாப்பு அமைப்பு மின்கலனில் உள்ளது. இதன் மூலமாக சூரியனை முழுவதுமாக ஆய்வு செய்து நாசா மிகப்பெரிய சாதனையைப் படைத்தது.