ஆஸ்திரியா நாட்டைச் சேர்ந்த ஃபேபியோ விப்மர் சைக்கிள் சாதனைகள் செய்வதில் வல்லவர் ஆவார். இவர் சைக்கிள் ஸ்டண்ட் செய்வதில் உலகின் ராஜா என அழைக்கப்படுகிறார். இவர் கடந்த 1995-ம் ஆண்டு ஜூன் 30-ஆம் தேதி ஆஸ்திரியாவில் பிறந்தார். இவர் கடந்த 2016-ம் ஆண்டு தேசிய டவுன்ஹில் மவுண்டன் பைக்கிங் சாம்பியன்ஷிப்பை வென்றார்.
இவர் தெரு சாதனைகள் மற்றும் கீழ்நோக்கி மலை பைக்கிங் செய்வதில் வல்லவர் ஆவார். இவர் ஒருமுறை வானத்தில் ஹெலிகாப்டரில் சென்று கொண்டிருக்கும் போது தன்னுடைய சைக்கிளுடன் ஹெலிகாப்டரில் இருந்து கீழே குதித்து அசாத்தியமாக சைக்கிள் ஓட்டினார். இவர் சைக்கிள் ஓட்டும் வீடியோக்களை யூடியூபில் பார்க்கலாம்.