Categories
உலக செய்திகள்

உலகிலேயே மிகவும் பலவீனமான ராணுவம் இது தான்…. உங்களுக்கு இது தெரியுமா?…. இதோ சில தகவல்….!!!!

இந்த உலகில் உள்ள ஒவ்வொரு நாட்டிலும் உள்ள ராணுவம் காண்போரை மிரள வைக்கும். அதிலும் குறிப்பாக ரஷ்யா, சீனா, அமெரிக்கா மற்றும் இந்தியா போன்ற ஒரு சில நாடுகளின் ராணுவம் மிகவும் அதிகமான வீரர்களை கொண்டது. இந்த நாடுகளுடன் மோதுவதற்கு மற்ற நாடுகள் யோசிப்பார்கள். அப்படி ஒரு பலமான ராணுவத்தை இந்த நாடுகள் கொண்டுள்ளன. ஆனால் ஒரு சில நாடுகளில் உள்ள ராணுவம் மிகவும் பலவீனமானது. அந்த நாடு ராணுவம் மற்ற நாடுகளுடன் போரிடுவது மிகவும் கடினம். அப்படி ஒரு நாடுதான் தென் அமெரிக்கா கண்டத்தில் அமைந்துள்ள சுரினாம். அந்நாட்டில் உள்ள ராணுவம் மிகவும் பலவீனமானது.

அங்கு உள்ள ஒட்டு மொத்த ராணுவ வீரர்களின் எண்ணிக்கை 1,750 மட்டுமே. அவர்கள் அனைவரும் பயன்படுத்துகின்ற வண்டிகள் மிகவும் பாழடைந்த நிலையில் மோசமாக இருக்கும். அவர்கள் பயன்படுத்துவதில் மிகவும் மோசமான நிலையில் இருக்கின்ற 3 ஹெலிகாப்டர்கள், 3 கப்பல்களும் உள்ளன. இதெல்லாம் நம்மால் எதுவும் செய்ய முடியாது என்று தெரிந்துகொண்ட அந்நாட்டு ராணுவம் 2012ஆம் ஆண்டு 3 புது கப்பல்களை வாங்கியுள்ளனர். இவர்கள் வருடத்திற்கு ராணுவத்திற்கு என்று செலவு செய்கின்ற பணமும் மிக குறைவுதான். இந்த உலகத்திலேயே மிகவும் பலவீனமான ராணுவம் இதுதான் என்று கூறப்படுகிறது.

Categories

Tech |