Categories
பல்சுவை

“இவங்க தான் சிங்கப்பெண்” 8 மாத குழந்தைக்காக செய்த காரியம்…. என்னன்னு நீங்களே பாருங்க…!!

போலந்து நாட்டை சேர்ந்த மரியா ஆந்திரெச்சிக் 2020-இல் நடந்த டோக்கியோ ஒலிம்பிக்ஸில் ஈட்டி எறிதல் போட்டியில் 2-ஆம் இடத்தை பெற்றுள்ளார். இவர் தனது சில்வர் மெடலை 8 மாத குழந்தையின் ஆப்பரேஷன் செலவுக்காக விற்றுவிட்டார் என்பதை நம்ப முடிகிறதா…?  போலந்து நாட்டைச் சேர்ந்த 8 மாத குழந்தையின் அறுவை சிகிச்சைக்கு தேவையான பணத்தை தருமாறு அவரது குடும்பத்தினர் பொதுமக்களிடம் உதவி கேட்டனர். இதனை அறிந்த மரியா ஆந்திரெச்சிக் தான் வென்ற சில்வர் மெடலை ஏலத்தில் விட்டுள்ளார்.

அதன் மூலம் கிடைத்த பெரிய தொகையை 8 மாத குழந்தையின் அறுவை சிகிச்சை செலவிற்கு கொடுத்துள்ளார். இதனை அறிந்ததும் சில்வர் மெடலை வாங்கிய நிறுவனம் அதனை மரியா ஆந்திரெச்சிக்க்கு திரும்ப கொடுத்தது. இதில் ஆச்சரியப்பட வைக்கும் விஷயம் என்னவென்றால் 2020-ல் ஒலிம்பிக்கில் 2-ஆம் இடத்தை பெற்று வெற்றி பெற்ற மரியா ஆந்திரெச்சிக் 2018-ஆம் ஆண்டு எலும்பு புற்று நோயால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Categories

Tech |