சென்னை மாநகராட்சியில் கொரோனா தடுப்பூசி முகாம் நாளை ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருப்பதாக மேயர் பிரியா தெரிவித்துள்ளார்.
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நாளை ஞாயிற்றுக்கிழமை கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற இருப்பதாக நேற்று முன்தினம் ரிப்பன் மாளிகையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. மேயர் பிரியா தலைமை தாங்கிய இந்த கூட்டத்தில் கமிஷனர் ககன்தீப் சிங் பேடி முன்னிலை வகித்துள்ளார்.
இதுகுறித்து மேயர் பிரியா பேசியதாவது, சென்னை மாநகராட்சியில் நாளை ஞாயிற்றுக்கிழமை 3300 இடங்களில் மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் 1,600 குழுக்களாக அமைக்கப்பட்டு வார்டுக்கு ஒரு முகாம் என்ற நிலையில் 200 நிலையான முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் மீதமுள்ள 1400 குழுக்கள் 3,100 இடங்களில் பொதுமக்களின் தேவைப்படி முகாம் அமைக்கப்பட்டு தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது என்று அவர் தெரிவித்தார்.