Categories
தேசிய செய்திகள்

உத்தரப் பிரதேசம் அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் ஈராக் மாணவர் மர்ம மரணம்!

அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் பயின்ற ஈராக் மாணவர் சந்தேகத்திற்குரிய வகையில் இறந்து கிடந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேசம் அலிகார் நகரத்தில் அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம் இயங்கிவருகிறது. இந்தப் பல்கலைக்கழகத்தில் புவியியல் துறையில் பி.ஹெச்.டி. மாணவராக இருந்தவர் ஏ. ஏ. ஹமித். ஈராக் நாட்டைச் சேர்ந்த இவர், அடுக்குமாடிக் குடியிருப்பில் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து வசித்துவந்தார். நீண்ட நேரமாகியும் சம்பவ தினத்தன்று வீட்டை விட்டு இவர் வெளியே வரவில்லை எனக் கூறப்படுகிறது.

இதையடுத்து, அண்டை வீட்டில் வசிக்கும் ஷாபாத் இக்பால் என்ற பெண்மணி காலை 11 மணி அளவில் வீட்டு கதவை தட்டியுள்ளார். ஆனால், நீண்ட நேரமாகியும் கதவு திறக்கப்படாததால், அடுக்குமாடிக் குடியிருப்பில் வசிக்கும் மற்றவர்களுக்கு தகவல் கொடுத்துள்ளார்.

பின்னர், காவல் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற காவல் துறையினர் கதவை உடைத்து வீட்டின் உள்ளே சென்றனர். தரையில் படுத்திருந்த ஹமீத்தின் உயிர் பிரிந்துவிட்டதைத் தெரிந்துகொண்ட காவல் துறையினர், உடலை உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பிவைத்தனர்.

அடுக்குமாடி குடியிருப்பு

அடுக்குமாடிக் குடியிருப்பு

பின்னர், இது குறித்து ஈராக் தூதரகத்திற்கு தெரிவிக்கப்பட்டது. ஈராக் மாணவர் சந்தேகத்திற்குரிய வகையில் இறந்து கிடந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |