Categories
கரூர் மாவட்ட செய்திகள்

மக்களே உஷார்….!! ஹோட்டல்களில் அதிரடி சோதனை…. மாவட்ட ஆட்சியரின் எச்சரிக்கை…!!

சுகாதாரமற்ற முறையில் வைத்திருந்த கோழி இறைச்சியை அதிகாரிகள் பறிமுதல் செய்து அழித்தனர்.

கரூர் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் கலைவாணி தலைமையிலான அதிகாரிகள் நேற்று சவர்மா தயாரித்து விற்பனை செய்யும் உணவகங்களில் தீவிரமாக ஆய்வு செய்துள்ளனர். அப்போது ஒரு ஹோட்டலில் சுகாதாரமற்ற முறையில் வைத்திருந்த 10 கிலோ கோழி இறைச்சியை அதிகாரிகள் பறிமுதல் செய்து அழித்தனர். இதனை அடுத்து பிளாஸ்டிக் பைகள் வைத்திருந்த மற்றொரு கடைக்கு அதிகாரிகள் 2000 ரூபாய் அபராதம் விதித்தனர்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் கூறும்போது, விதிமுறைகளை பின்பற்றாமல் சவர்மா தயாரித்து விற்பனை செய்தால் எந்தவித முன்னறிவிப்புமின்றி கடைகள் மூடப்படும் என எச்சரித்துள்ளார். இதனை அடுத்து சவர்மா தயாரிப்பதில் சுகாதார குறைபாடுகளை கண்டறிந்தால் 9444042322 என்ற மாநில உணவு பாதுகாப்பு துறையின் வாட்ஸ்-அப் எண்ணை தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என கூறியுள்ளார்.

Categories

Tech |