பாகிஸ்தான் நாட்டின் ஷெபாஸ் ஷெரிப் தலைமையிலான நிர்வாகம், முன்னாள் பிரதமரான இம்ரான்கான் சொத்துக்களை சோதனை செய்ய தீர்மானித்திருக்கிறது.
பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமரான இம்ரான்கான் பதவி நீக்கம் செய்யப்பட்டதை தொடர்ந்து அவருக்கு பதிலாக, ஷெபாஸ் ஷெரிப் புதிய பிரதமராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில், ஷெபாஸ் ஷெரிப், இம்ரான் கானின் சொத்துக்கள், வருவாய் தொடர்பில் சோதனை செய்ய தீர்மானித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தெஹ்ரீக் இ இன்சாப் என்னும் கட்சியின் மத்திய செயலகத்தில் பணிபுரிந்த முகமது அர்ஷத், முகமது ரபீக், முகமது நோமேன் அப்சல், தாஹிர் இக்பால் போன்றோரின் வங்கி கணக்கு குறித்த தகவல்களை பெறவும் தீர்மானிக்கப்பட்டிருக்கிறது.
பாகிஸ்தான் நாட்டின் தெஹ்ரீக் இ இன்சாப் என்ற கட்சியை சேர்ந்த 4 பணியாளர்களின் வங்கி கணக்கில் அதிக தொகை வரவு வைக்கப்பட்டிருக்கிறது. இதற்கான சான்றுகள் கிடைக்கும் பட்சத்தில், அவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.