ஏர் இந்திய நிறுவனத்தின் 100 சதவீத பங்குகள் தனியாருக்கு விற்பனை செய்யப்படும் என்று மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது
ஏர் இந்தியா நிறுவனம் சுமார் 80 ஆயிரம் கோடி ரூபாய் கடனில் சிக்கி தவித்து வருகிறது. இதன் எதிரொலியாக ஏர் இந்தியாவை தனியார் மயமாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த நிலையில் ஏர் இந்தியாவை முழுவதுமாக தனியாருக்கு விற்பனை செய்ய மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது.
ஏர் இந்தியாவில் பங்குகளை வாங்க விருப்பமுள்ள நிறுவனங்கள் மார்ச் 17ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஏர் இந்தியாவில் இனைப்பு நிறுவனங்களின் 50% பங்குகளையும் விற்பனை செய்து விட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அரசின் இந்த அறிவிப்பு மூலம் அரசுத்துறை நிறுவனமான ஏர் இந்தியா விரைவில் தனியார் வசம் ஆக இருக்கிறது.