Categories
மாநில செய்திகள்

தமிழக BJP-ல் இருந்த காயத்ரி ரகுராம் பதவி பறிப்பு…. அண்ணாமலை அதிரடி உத்தரவு…..!!!!!

தமிழக பா.ஜனதா கட்சியின் மாநில நிர்வாகிகள், அணிகள், பிரிவுகளின் தலைவர்கள் மற்றும் மாவட்ட பார்வையாளர்களை நியமித்து பா.ஜ.க தலைவர் அண்ணாமலை உத்தரவு பிறப்பித்துள்ளார். இதையடுத்து புதிதாக நியமனம் செய்யப்பட்டவர்களுக்கு தங்களுடைய பணிகள் சிறக்க வாழ்த்துக்கள் என்றும் அந்த கட்சியின் ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அண்ணாமலை வெளியிட்ட புது பட்டியலில் பொதுச்செயலாளராக இருந்த கரு.நாகராஜனுக்கு துணைத்தலைவர் பதவி மாற்றி வழங்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் கே.பி. ராமலிங்கம், சசிகலா புஷ்பா, நாராயணன் திருப்பதி, பால் கனகராஜ் போன்றோரும் மாநிலத் துணைத் தலைவர்களாக நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.

பா.ஜ.க மாநில பொதுச்செயலாளர்களாக எம்.முருகானந்தம், ஏ.பி.முருகானந்தம், சீனிவாசன், கார்த்தியாயினி ஆகியோர் புதிதாக நியமனம் செய்யப்பட்டு இருக்கின்றனர். அத்துடன் கலாசார பிரிவு மாநில தலைவராகயிருந்த காயத்ரி ரகுராம் நீக்கப்பட்டு, அவருக்கு பதில் பெப்சி சிவக்குமார் நியமனம் செய்யப்பட்டு உள்ளார். ஊடகப்பிரிவு தலைவர் பொறுப்பில் இருந்து ஏ.என்.எஸ். பிரசாத் நீக்கப்பட்டு அவருக்கு பதில் ரங்கநாயகலு நியமனம் செய்யப்பட்டு உள்ளார். இளைஞரணி தலைவர் பொறுப்பில் இருந்து வினோஜ் பி.செல்வம் நீக்கப்பட்டு இருக்கிறார்.

அந்தஇடத்தில் புது தலைவராக ரமேஷ் சிவா நியமனம் செய்யப்பட்டு உள்ளார். இதற்கிடையே இளைஞரணி தலைவர் பொறுப்பில் இருந்த வினோஜ் பி.செல்வத்திற்கு மாநில செயலாளர் பதவி வழங்கப்பட்டு உள்ளது. மகளிரணி தலைவராக உமாரதி, பட்டியலின (எஸ்.சி) அணி தலைவராக தடா.பெரியசாமி, பழங்குடி (எஸ்.டி) அணி தலைவராக சிவப்பிரகாசம், சிறுபான்மையினர் அணி தலைவராக டெய்சி சரண், ஓபிசி அணி தலைவராக சாய் சுரேஷ் போன்றோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

Categories

Tech |