உக்ரைன் ரஷ்யா போரினால் நோயாளிகளுக்கு மருந்து கொடுக்க முடியாமல் மருத்துவர்கள் தவித்து வருகின்றனர்.
உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் இரண்டு மாதங்களுக்கும் மேல் தொடர்ந்து நீடிக்கும் நிலையில் போரினால் உக்ரைனில் மருத்துவ கட்டமைப்பு முற்றிலுமாக சேதமடைந்துள்ளது. இதனைத்தொடர்ந்து அறுவை சிகிச்சை செய்ய முடியாமலும் கேன்சர் நோயாளிகளுக்கு மருந்து வழங்க முடியாமலும் மருத்துவர்கள் தவித்து வருகின்றனர்.
இந்நிலையில் உக்ரைனுகாக இங்கிலாந்து நாட்டில் நிதி திரட்டும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதனை அறிந்து ஜெலன்ஸ்கி காணொளி மூலம் பேசியதாவது “ரஷ்ய தாக்குதலினால் 400க்கும் மேற்பட்ட மருத்துவமனைகள் சேதமடைந்துள்ளது. மேலும் கிழக்கு உக்ரைனில் போர் உக்கிரமாக நடந்து வரும் இந்த சமயத்தில் சாதாரண மருந்து மாத்திரைகளுக்கு கூட தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது” என்று அவர் தெரிவித்துள்ளார்.