சட்டவிரோதமாக காரில் போதைப்பொருள் கடத்தி வந்த 6 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வேடசந்தூர் சாலையில் சட்டவிரோதமாக கர்நாடக மாநிலத்தில் இருந்து காரில் போதை பொருட்கள் கடத்தி வருவதாக தனிப்படை காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் சீனிவாசன் தலைமையிலான தனிப்படை காவல்துறையினர் கரூர்-திண்டுக்கல் நான்கு வழி சாலையில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வக்கீல் ஸ்டிக்கர் ஒட்டிய கார் ஒன்று வந்துள்ளது. அதனை தொடர்ந்து 3 கார்கள் வந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் 4 கார்களையும் நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அந்த சோதனையில் சட்டவிரோதமாக காரில் 5 லட்ச ரூபாய் மதிப்பிலான குட்காவை கடத்தி வந்தது தெரியவந்துள்ளது.
இதையடுத்து காவல்துறையினர் நாகர்கோவில், மதுரை ஆகிய பகுதியில் இருந்து சட்டவிரோதமாக கர்நாடகாவிற்கு காரில் குட்கா கடத்தி வந்த இளையபாரதி, ஜீவா, ரத்தீஷ், அஜித் முரளி உள்ளிட்ட 6 பேரை கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவர்களிடம் இருந்த குட்காவை பறிமுதல் செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.