Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

“கிணற்றில் குளிக்கச் சென்ற வாலிபர்”…. பரிதாபமாக உயிரிழப்பு…!!!!

ஆரணி அருகே வாலிபர் ஒருவர் கிணற்றில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணி புதுகாமூர் பகுதியில் வாழ்ந்து வந்தவர் 25 வயதுடைய புஷ்பராஜ். இவர் சில நாட்களுக்கு முன்பு விடுமுறை காரணமாக ஆரணிக்கு வந்த நிலையில் நேற்று நண்பர்களுடன் ஆரணியை அடுத்த ராட்டினமங்கலம் கிராமத்தில் இருக்கும் கிணற்றில் குளிக்கச் சென்று இருக்கின்றார்.

அப்போது திடீரென கிணற்றில் தவறி விழுந்ததை அடுத்து அவருடன் வந்தவர்கள் காப்பாற்ற முயற்சித்த நிலையில் மீட்க முடியாததால் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்து இருக்கின்றார்கள். இதையடுத்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் நேற்று பகல் 2.30 மணி முதல் 7:30 மணி வரை தீவிரமாக தேடுதல் பணியில் ஈடுபட்டு கிணற்றில் இருந்த தண்ணீரை வடிய செய்தபிறகு பிணமாக புஷ்பராஜை மீட்டார்கள். இதையடுத்து அவரின் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆரணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றார்கள்.

Categories

Tech |