சிம்மம் ராசி அன்பர்கள், இன்று புதிய பொறுப்புகள் இல்லம் தேடி வரக்கூடிய நாளாக இருக்கும். புகழ்மிக்கவர்களை சந்தித்து மகிழ்வீர்கள், இடமாற்றம் கொஞ்சம் திருப்திக் கொடுக்காமல் போகலாம், மற்றவரிடம் ஒப்படைத்த பொறுப்புகள் மீண்டும் உங்களிடமே திரும்பி வரலாம். இன்று நீண்ட நாட்களாகவே எதிர்பார்த்துக் கொண்டிருந்த பணம் கையில் வந்து சேரும்.
நண்பர்களால் காரிய அனுகூலம் உண்டு. எல்லா வித வசதிகளையும் இன்று நீங்கள் அனுபவிக்கக்கூடும் . தேடி போனதும் தானாகவே வந்து சேரும், அறிவு திறன் அதிகரிக்கும், ஓய்வில்லாமல் உழைக்க வேண்டி இருக்கும். அதற்கேற்றவாறு கூடுதல் வருமானம் வந்து சேரும்.
பழைய பாக்கிகள் வசூலாகும். உடல்நிலையில் இருந்து வந்த சிரமங்கள் முற்றிலும் நீங்கும். இன்றைய நாள் மன மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். வெளி வட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். இன்று மாணவ செல்வங்களுக்கு சிறப்பான முன்னேற்றம் இருக்கும் , ஆசிரியர்களின் ஒத்துழைப்பும், சக மாணவர்களின் ஒத்துழைப்பும் பரிபூரணமாக கிடைக்கும்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், அது உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டும் இல்லாமல் இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்துக் காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு
அதிர்ஷ்ட எண் : 4 மற்றும் 6
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் வெளிர் நீலம்