Categories
உலக செய்திகள்

முடிவடைய போகும் பனிச்சறுக்கு சீசன்…. காற்றில் பறக்கும் வண்ணங்கள்…. வைரலாகும் வீரர்களின் சாகசம்….!!

பனிசறுக்கு சீசன் முடிவதை குறிக்கும் வகையில் பல வண்ணங்களை காற்றில் தூவி பனிச்சறுக்கு வீரர்களின் சாகச வீடியோ இணையத்தில் வைரலாகி உள்ளது.

ஸ்விட்சர்லாந்து நாட்டில் வலாய்ஸ் என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் பனிசறுக்கு சீசன் முடிவதை குறித்து நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் பனிச்சறுக்கு வீரர்கள் பல விதமான வண்ணங்களை காற்றில் தூவியபடி சாகசங்களில் ஈடுபட்ட காட்சி இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

இதனைத்தொடர்ந்து வலாய்ஸ் பகுதியிலுள்ள க்ரேன்ஸ் மோண்டனா ரிசார்ட்டில் பிரபல பனிச்சறுக்கு தளத்தில் நடைபெற்றுள்ள தி நைன்ஸ் நிகழ்ச்சியில் பனிச்சறுக்கு வீரர்கள் கலந்து கொண்டு ஆல்ப்ஸ் பனிமலையில் உற்சாகமாக சறுக்கியும், பறந்தும் புதுமையான வித்தைகளை செய்து தங்களின் தனித்தனி திறமைகளை வெளிப்படுத்தியுள்ளனர். இந்த நிகழ்ச்சியின் முடிவில் சிறந்த டிரிக், சிறந்த ஸ்டைல், போன்ற பிரிவுகளின் கீழ் சிறப்பான சாகசங்கள் செய்தவர் யார் என்று அடையாளம் காணப்பட்டு விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

Categories

Tech |