Categories
தேசிய செய்திகள் பல்சுவை

“அண்ணே அதை மறந்துராதீங்க” டெலிவரி பாய் செய்த காரியம்…. கடைசியில தான் டுவிஸ்ட்டே இருக்கு…!!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்பம் வளர்ந்து கொண்டே வரும் இந்த சூழலில் பெரும்பாலானோர்  தங்களுக்கு தேவையான உணவு பொருட்களை கூட ஆன்லைன் மூலமாக ஆர்டர் செய்து சாப்பிடும் கலாச்சாரம் பெருகிவிட்டது. குறிப்பாக சென்னை , பெங்களூர் உள்ளிட்ட பெருநகரங்களில் சில குடும்பங்கள் வீட்டில் சமைப்பது கிடையாது. ஆன்லைன் மூலமாக ஆர்டர் செய்து தங்களுக்கு தேவையான உணவை சாப்பிட்டு வருகின்றனர். இவ்வாறு ஆன்லைன் மூலமாக உணவு கொடுத்து ஆட செய்வதற்காகவே ஸ்விகி, zomato உள்ளிட்ட நிறைய செல்போன் ஆப்கள் வந்து விட்டது.

இது வாடிக்கையாளர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதே நேரம் சில சமயம் பல்வேறு சர்ச்சைகளில் சிக்குவது வழக்கமாக இருக்கிறது. அந்த வகையில் தற்போது ஸ்விக்கி டெலிவரி பாய் ஒருவர் செய்த காரியம் ஒன்று இணையத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பெங்களூரை சேர்ந்த நபர் ஒருவர் கஃபே காஃபி டே வில் காபி ஆர்டர் செய்துள்ளார். அதை பிக்கப் செய்த அந்த டெலிவரி பாய் கஸ்டமருக்கு டெலிவரி செய்ய சோம்பேறி பட்டு அந்த ஆர்டரை அப்படியே டன்ஸோ ஆப் மூலமாக டெலிவரி செய்துள்ளார்.

ஆனால் வடிக்கையாளருக்கோ ஆர்டர் செய்த இடம் ஒன்று. டெலிவரி வந்த இடம் ஒன்று. இதை பார்த்து கடுப்பான அந்த வாடிக்கையாளர் டுவிட்டர் பதிவில், ஸ்விக்கி டெலிவரி பாய் வேலை சரியாக செய்யாமல் இந்த டெலிவரிக்கான சேவைக்கு ரேட்டிங் என்று சம்பந்தப்பட்ட நபருக்கு கால் செய்துள்ளார். ஆனால் ஹிந்தியில் பேசிய அந்த டெலிவரி பாய், “அண்ணே எனக்கு கண்டிப்பாக ஒரு ஸ்டார் கொடுத்துவிடுங்கள்” என்று கேட்டுள்ளார். எனவே இதுபோன்ற சம்பவங்களால் வாடிக்கையாளர்கள் மத்தியில் சில சமயம் அதிருப்தி ஏற்பட்டு வருகிறது. சரியாக வேலை செய்யாதது என்பது இதுதானோ என்று கேள்வி எழுப்பி வரும் நெட்டிசன்கள் இதுபோன்று தாங்கள் சந்தித்த பல பிரச்சினைகளையும் பகிர்ந்து வருகின்றனர்.

Categories

Tech |