Categories
தேசிய செய்திகள்

கிரெடிட் கார்டில் பில்லிங் தேதியை மாற்றுவது இனி ரொம்ப ஈசி…. வாங்க பார்க்கலாம்….!!!

வாடிக்கையாளர்களின் நலனுக்காக ரிசர்வ் வங்கி கிரெடிட் கார்டில் புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்திய ரிசர்வ் வங்கி வாடிக்கையாளர்களின் நலனுக்காக கிரெடிட் கார்டில் புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது வாடிக்கையாளர்களின் வசதிக்கு ஏற்ப கிரெடிட் கார்டில் பில்லிங் சுழற்சியை மாற்றியமைப்பதற்கான வழிமுறைகள் செய்யப்பட்டுள்ளது. ஆனால் ஒருமுறை மட்டுமே வாடிக்கையாளர்களால் கிரெடிட் கார்டில் மாற்ற முடியும். இந்த திட்டம் ஜூலை 1-ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது. தொடர்ச்சியான பில்களின் இறுதி தேதிக்கு இடைப்பட்ட கால இடைவெளி பில்லிங் தேதி என அழைக்கப்படுகிறது. இது முடிவடைந்து 15 முதல் 20 நாட்களுக்குள் நீங்கள் பணத்தை வங்கிக்கு செலுத்த வேண்டும்.

நீங்கள் குறிப்பிட்ட நிலுவை தொகைக்குள் பணத்தை வங்கியில் செலுத்தி விட்டால் அதற்கு வட்டி செலுத்த வேண்டிய அவசியமில்லை. ஆனால் காலதாமதம் செய்தால் வட்டி மற்றும் அபராதம் விதிக்கப்படும். இந்நிலையில் தற்போது வெளியான புதிய அறிவிப்பின் படி வாடிக்கையாளர்கள் தங்கள் வசதிக்கு ஏற்ப பில்லிங் சுழற்சியை மாற்றி கொள்ளலாம். எடுத்துக்காட்டாக நீங்கள் ஒவ்வொரு மாதமும் 5-ம் தேதிக்கு முன்னதாக பணம் செலுத்த வேண்டும் என விரும்புகிறீர்கள். அப்படியென்றால் உங்கள் வசதிக்கு ஏற்ப பில்லிங் சுழற்சியை மாற்றி கொள்ளலாம். இந்த அறிவிப்பு பல கிரடிட் கார்டுகள் வைத்திருப்பது மிகவும் பயனளிக்கும். மேலும் ஒரு நாளில் அல்லது ஒரு மாதத்திற்கு முன்பாக பணம் செலுத்தும் தேதியை ஒருமுறை மட்டுமே மாற்றிக் கொள்ளலாம்.

Categories

Tech |