தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்தததையடுத்து மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்கள் அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் திமுக தலைமைப் பொறுப்பை ஏற்று ஒரு வருடம் முடிந்து விட்ட நிலையில் இந்த ஒரு வருட காலத்தில் திமுக அரசு செய்த சாதனைகள் குறித்து தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் இன்று சட்டமன்றத்தில் உரையாற்றினார். இதில் வேலைவாய்ப்பு தொடர்பான பல்வேறு முக்கிய அம்சங்கள் இடம் பெற்றன.
அந்தவகையில் 124 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலமாக புதியதாக 1.90 லட்சம் வேலைவாய்ப்புகள் தமிழகத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனம் மூலமாக உருவாக்கப்பட்ட தொழில்கள் மூலமாக 27 ஆயிரத்து 775 பேர் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர் .ஊரக சுய வேலைவாய்ப்பு நிறுவனத்தின் மூலமாக 15 ஆயிரம் இளைஞர்கள் பயிற்சி பெற்று அதில் 13 ஆயிரம் பேர் சுயதொழில் தொடங்கி உள்ளனர். தமிழகத்தில் மாவட்ட வேலைவாய்ப்பு முகாம் மூலமாக 32,000 பேர் வேலை பெற்றுள்ளனர். தமிழகம் முழுவதுமாக கடந்த ஆண்டு நடத்தப்பட்ட வேலைவாய்ப்பு முகாம்களில் 68,800 பேர் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.