மத்திய அரசின் கீழ் சீனியர் சிட்டிசன்களுக்கு பென்சன் வழங்கும் அருமையான திட்டத்தை பற்றி இந்த தொகுப்பில் நாம் தெரிந்து கொள்வோம்.
மத்திய அரசின் கீழ் சீனியர் சிட்டிசன்கள் பென்ஷன் பெற வேண்டும் என்பதற்காக பிரதமர் வய வந்தன யோஜன திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இந்தத் திட்டம் சீனியர் சிட்டிசன்களுக்காக அறிமுகம் செய்யப்பட்டது. இந்த திட்டத்தில் எப்படி முதலீடு செய்யவேண்டும் என்பதை பற்றி இந்த தொகுப்பில் நாம் தெரிந்து கொள்வோம். கடந்த 2020-ம் ஆண்டு மே 26ம் தேதி பிரதமர் வய வந்தன யோஜன திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த திட்டம் அடுத்த வருடம் மார்ச் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தத் திட்டத்தின் கீழ் சீனியர் சிட்டிசன்களுக்கு உத்தரவாதம் அளிக்கும் பெயரில் பல பென்ஷன் கிடைக்கும்.
ஒவ்வொரு ஆண்டின் தொடக்கத்தில் சீனியர் சிட்டிசன்களுக்கு வழங்கப்படும் பென்சன் விகிதம் தொடர்பாக மத்திய அரசு ஒரு முடிவு செய்யும். அதேபோன்று இந்த ஆண்டு பென்ஷன் விகிதம் 7.40 சதவீதம் என்று தீர்மானம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த பிரதமர் வய வந்தன யோஜன திட்டத்தின் முழு அதிகாரமும் எல்ஐசி நிறுவனத்துக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. இதில் முதலீடு செய்ய விரும்புபவர்கள் என்ற https://licindia.in/ இணையதளத்தின் வாயிலாக முதலீடு செய்யலாம். இல்லை என்றால் எல்ஐசி அலுவலகத்திற்கு நேரடியாக சென்று பாலிசியை வாங்கிக்கொள்ளலாம்.
60 வயதை தாண்டியவர்கள் அனைவரும் இதில் முதலீடு செய்யலாம். அதிகபட்சம் 1.5 லட்சம் ரூபாய்வரை முதலீடு செய்ய முடியும். இந்த திட்டத்தில் குறைந்தபட்சம் 1,000 ரூபாய் பென்ஷன் கிடைக்கும். அதிகபட்சமாக 9250 பென்சன் வழங்கப்படும். பாலிசி வாங்கி 3 ஆண்டுகள் கடந்த பிறகு கடன் பெற்றுக் கொள்ள முடியும். இந்த பாலிசி விலையில் 75% வரை நீங்கள் கடனாக பெறுவதற்கு அனுமதி உண்டு .