பாகிஸ்தான் நாட்டில் இந்திய நாட்டின் பணம் செல்லுமா? என்பது குறித்து இப்போது பார்க்கலாம். ஒரு வாழைப்பழம் கடையில் இந்தியாவை சேர்ந்த ஒருவர் வாழைப்பழம் வாங்கி விட்டு இந்திய பணத்தை கடைக்காரரிடம் கொடுக்கிறார். அதற்கு அந்த கடைக்காரர் இந்திய பணம் இங்கு செல்லாது என்று கூறி இலவசமாகவே அந்த வாழைப்பழத்தை கொடுக்கிறார்.
அதேபோல அந்த இந்தியர் மற்ற கடைகளிலும் இந்திய பணத்தை கொடுத்து பொருள் கேட்கிறார். அங்கும் அந்த கடைக்காரர் பணத்தை திருப்பி கொடுத்துவிட்டு இலவசமாகவே அந்த பொருளை கொடுத்து விடுகிறார். இதனையடுத்து அவர் வேறு ஒருவரிடம் இந்திய பணத்தை கொடுத்துவிட்டு பாகிஸ்தான் பணத்தை கொடுக்க முடியுமா? என்று கேட்கிறார். அதற்கு அவர் எனக்கு இந்திய பணம் வேண்டாம். அது இங்கு செல்லாது. எனவே என்னிடம் பாகிஸ் தான் பணம் இருக்கிறது அதை வாங்கி கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார். இதிலிருந்து பாகிஸ்தானில் இந்திய பணம் செல்லாது என்பது தெளிவாக தெரிகிறது.