அண்ணா பல்கலைக்கழகம் புதிய சான்றிதழ் பெறுவதற்கான கட்டணத்தை பத்து மடங்கு உயர்த்தியுள்ளது.
சான்றிதழ்கள் என்பது ஒவ்வொரு காலகட்டத்திலும் தேவைப்படும் முக்கிய ஆவணமாகும். மேற்படிப்பு பயில, வேலைகளில் சேர, அரசு உதவி பெற என பல்வேறு காரணங்களுக்கு பயன்படுகிறது. அவ்வாறு பயனுள்ள இந்த சான்றிதழ்கள் ஏதேனும் காரணத்தினால் தொலைந்து போனால் அதற்கான நகலை பெற முடியும். மேலும் அதற்கான கட்டணமும் வசூலிக்கப்படும்.
இந்த நிலையில் அண்ணா பல்கலைகழகம் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. “அதில் 23 வகையான சான்றிதழுக்கு பத்து மடங்கு கட்டணத்தை உயர்த்தி உள்ளது. அதாவது கிரேடு, மதிப்பெண் சான்றிதழ் தொலைந்து போனால் மீண்டும் புதிய சான்றிதழை பெற ரூபாய் 300ல் இருந்து 3000ஆக உயர்த்தி உள்ளது. மேலும் பட்டப்படிப்பிற்கான சான்றிதழ் பெறுவதற்கு ரூபாய் 3000ம்இருந்த நிலையில் தற்போது ரூபாய் 5000 உயர்த்தி உள்ளது. இந்த கட்டணங்கள் முதல் முறை புதிய சான்றிதழ் பெறுவதற்கு மட்டுமே. அதுவே இரண்டாவது முறை தொலைந்து போனால் மீண்டும் பெறுவதற்கு ரூபாய் 10,000 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு முன்னதாகவே அமலுக்கு வந்துள்ளதாக” தெரிவித்துள்ளது.