மனிதனின் முகத்தில் இருந்து வரக்கூடிய ஒன்பது பாவனைகளை தான் நாம் நவரசங்கள் என்று அழைக்கின்றோம். நாம் அனைவரும் நினைத்துக் கொண்டிருக்கிறோம் இது உலகிலேயே மனிதர்களுக்கு தான் அதிகம் முகபாவனை காட்டமுடியும் என்று, ஆனால் அது உண்மை இல்லை. ஏனெனில் குதிரைகளுக்கு தான் மனிதனை விட அதிகமாக முகபாவனைகளை காட்டமுடியும். ஏன் மனிதர்களை விட மிகவும் அருமையாக முகபாவனைகளை குதிரைகள் காட்டும் என்று தெரிவிக்கின்றனர்.
தற்போது நடத்தப்பட்ட ஆய்வின்படி குதிரைகளும் தங்களுடைய மேல்தாடை, உதடுகள், நாடி முதலான பாகங்களை பல்வேறு வகையாக அசைத்து உணர்வுகளை வெளிப்படுத்துகின்றது. தங்களது உணர்வுகளை மிக நுட்பமாக வெளிப்படுத்த நாசி, உதடு, கண் முதலான பகுதிகளில் தசைகளை முறுக்கி விரித்து பாவனைகளை வெளிப்படுகிறது என ஆய்வு தெரிவிக்கின்றது. விலங்குகளில் பூனை, நாயை விட குதிரைகளுக்கு தான் கண் பார்வை கூர்மையாக இருக்கும். மேலும் துல்லியமாக முகபாவனைகளை வெளிப்படுத்தும் திறனும் குதிரைகளுக்கு உண்டு என்று கூறுகின்றனர் பிரிட்டனிலுள்ள சஸ்ஸ்பேஸ் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் ஆராய்ச்சியாளர்கள். குதிரைகள் மனிதர்கள் மட்டுமல்லாமல் சிம்பான்சி குரங்குகளுக்கும் இதுபோன்று முகபாவனைகள் கொடுக்க முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். குதிரைகளால் ஏறக்குறைய 17 வகையான முகபாவனைகளை கொடுக்க முடியும்.