பிரான்ஸ் நாட்டை சேர்ந்த மெல்லர் என்பவர் ஒரு பயம் அறியாத மனிதராவார். இவர் சாகசங்கள் செய்வதையே தன்னுடைய வேலையாக வைத்திருந்தார். இவர் ஒரு முறை எந்த ஒரு பாதுகாப்பும் இல்லாமல் மலையில் இருந்து குதித்தார். இதேப்போன்று 2 பாராஷூட் இடையில் ஒரு கயிறை கட்டி எந்த ஒரு பாதுகாப்பும் இல்லாமல் ஒரு பக்கத்திலிருந்து மறுபக்கத்திற்கு நடந்துள்ளார். அவர் ஒருமுறை நடக்கும் போது கயிற்றில் இருந்து தடுமாறி விழுந்தார்.
ஆனால் விழும்போது கயிரை பிடித்ததால் அதிஷ்டவசமாக மெல்லர் உயிர் தப்பினார். ஆனால் மறுபடியும் மெல்லர் பாராசூட்டின் ஒரு பக்கத்தில் இருந்து மற்றொரு பக்கத்திற்கு கயிற்றில் நடந்துள்ளார். இவர் இம்முறை நடக்கும் போது கையில் குடை வைத்திருந்தார். ஆனால் மறுபடியும் மெல்லர் கயிறிலிருந்து கீழே விழுந்துவிட்டார். இவர் மிகவும் உயரத்தில் இருந்து கீழே விழுந்ததால் உயிரிழந்துவிட்டார்.