Categories
பல்சுவை

ஒரு நபர் செய்த தவறு…. 181 பேர் பாதிப்பு…. எப்படி தெரியுமா…? இதோ ஒரு உண்மை சம்பவம்….!!

ஒரு மனிதன் தற்கொலை செய்து கொள்வது என்பது மிகவும் தவறான விஷயமாகும். ஆனால் ஒருவர் தற்கொலை செய்யும் போது அது மற்றவர்களை காயப்படுத்தினால் அதைவிட மிகப்பெரிய தவறு வேறு எதுவும் கிடையாது. இதேப்போன்று ஒரு சம்பவம் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்துள்ளது. கடந்த 2005-ம் ஆண்டு ஜனவரி 26-ஆம் தேதி காலை 6 மணிக்கு Juan Manuel என்பவர் தற்கொலை செய்வதற்காக காருடன் ரயில்வே தண்டவாளத்தில் நின்றுள்ளார். ஆனால் ரயில் வந்து கொண்டிருக்கும் போது Juan Manuel‌ க்கு உயிர் மீது மிகுந்த பயம் ஏற்பட்டுள்ளது. இதனால் Juan Manuel தன்னுடைய காரை ரயில்வே தண்டவாளத்தில் விட்டுவிட்டு அவர் மட்டும் காரில் இருந்து கீழே இறங்கி விட்டார்.

இந்த காரின் மீது ரயில் ஏறியதால் மிகப்பெரிய விபத்து நேர்ந்தது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 15 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அதன் பிறகு 181 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் மற்றும் படுகாயம் அடைந்தவர்களின் குடும்பத்தினர் மிகவும் பாதிக்கப்பட்டனர். இந்த விபத்து ஏற்படக் காரணமாக இருந்த Juan Manuel -க்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. மேலும் நம்முடைய சுய நலத்திற்காக பிறரை காயப்படுத்தக் கூடாது என்பது இந்த செய்தியை பார்க்கும்போதுதான் தெரிகிறது.

Categories

Tech |