இந்திய ரூ.2000 பணத்தாள் இந்திய ரிசர்வ் வங்கியால் நவம்பர் 08 ஆம் திகதி 2016 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட ரூபாய் இரண்டாயிரம் மதிப்புடைய பணத்தாள் ஆகும். இந்திய அரசாங்கம் நவம்பர் 08 ஆம் தேதி 2016 ஆம் ஆண்டு இரவிலிருந்து கருப்பு பண புழக்கத்தை முடக்கும் பொருட்டு செல்லாது என்று அறிவித்தது. ஆனால் ,ரூ.500 மற்றும் ரூ.2000 ஆகியவற்றின் புதுவடிவ நோட்டுக்கள் 11 ஆம் தேதி நவம்பர் 2016 அன்று வங்கிகளில் கிடைக்கும் என்று அறிவித்தது.
இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) ஒரு ரூபாய் நோட்டைத் தவிர அனைத்து மதிப்புகளின் கரன்சி நோட்டுகளையும் அச்சிடுகிறது. இந்நிலையில் 1 பத்து ரூபாய் நோட்டை அச்சிட ரூபாயும், 20 ரூபாய் நோட்டை அச்சிட 1 ரூபாயும், 50 ரூபாய் நோட்டை அச்சிட 1.01 ரூபாயும், 200 ரூபாய் நோட்டை அச்சடிக்க ரூ.2.93, 500 ரூபாய் நோட்டை அச்சடிக்க ஆகும் செலவு ரூ. 2.94 மற்றும் 2000 ரூபாய் நோட்டு அச்சடிக்க ரூ.4.18 செலவிக்கும். பழைய 500 ரூபாய் நோட்டை அச்சிட 3.09 ரூபாயும் செலவாகிறது.