பெரும்பாலும் நாம் எப்பொழுதும் வெளியில் செல்லும்போதோ அல்லது கடைக்குச் செல்லும் பொழுது பணமாகவோ அல்லது ஏடிஎம் கார்டையோ பையில் வைத்துக் கொண்டு செல்வோம். ஒருவர் ஒன்று அல்லது இரண்டு ஏடிஎம் கார்டுகள் வைத்திருப்பதே பெரிய விஷயம். ஆனால் அமெரிக்காவை சேர்ந்த ஒருவர் ஏராளமான கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி வருகிறார். அவர் எங்கு சென்றாலும் பணத்திற்கு பதிலாக கிரெடிட் கார்டுகளை மட்டுமே எடுத்து செல்வாராம்.
அவர் அணிந்திருக்கும் கோட் முழுவதுமாக கிரெடிட் கார்டு வைப்பதற்காக பயன்படுத்தி வருகிறார். இந்த கிரெடிட் கார்டுகள் அனைத்தும் கிலோ கணக்கில் எடை இருப்பதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி இவர் இவ்வளவு அதிகமான கிரெடிட் கார்டுகளை பயன்படுத்துவதால் கின்னஸ் உலக சாதனையில் இடம் பிடித்திருக்கிறார்.