Categories
உலக செய்திகள்

ரஷ்ய அதிபருக்கு சொந்தமான சொகுசு கப்பல் பறிமுதல்…. வெளியான அதிரடி உத்தரவு….!!!!!

இத்தாலி அரசு 5400 கோடி ரூபாய் மதிப்புடைய ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுடன் தொடர்புடையதாக கூறப்படும் சொகுசு கப்பலை பறிமுதல் செய்துள்ளது. இந்நிலையில் இந்த சொகுசு கப்பல்,6 தளங்களும் மற்றும் 2 ஹெலிகாப்டர் இறங்கு தளங்களும் கொண்டது. மேலும் இது ரஷ்ய அதிபர் புடினுக்கு சொந்தமானது தான் என்பதற்கான சான்றுகளை, அலெக்ஸி நவல்னியால் நிறுவப்பட்ட அமைப்பானது இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

மேலும் இந்த கப்பல் ரஷ்யாவின் எண்ணெய் நிறுவனுமான ரோஸ்னப்டின் முன்னாள் தலைவர் எட்வர்டு குடைநட்டோவ் என்ற பெயரில் உள்ளது. இதையடுத்து இக்கப்பலில் ஒரே நேரத்தில் 18 விருந்தினர்களும் மற்றும் 40 மாலுமி பணியாளர்கள் தங்கும்  வசதிகள் உள்ளது.

இதையடுத்து இந்த கப்பல், பழுது பார்ப்பதற்காக இத்தாலியின் மரினா டி கராரி என்ற துறைமுகத்துக்கு கொண்டு வரப்பட்டது. இதன்பிறகு, பழுது பார்க்கப்பட்டு மீண்டும் புறப்பட தயாரான நிலையில், இத்தாலி நிதியமைச்சகம் இந்த கப்பலை ரஷ்ய  அரசுக்கு தொடர்புடையது எனக் கூறி பறிமுதல் செய்ய உத்தரவு பிறப்பித்தது. இதை அடுத்து இந்த கப்பலை, காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

 

Categories

Tech |